உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் மனதை உலுக்கியது. நீலு என்பவர், தனது உறவினரின் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்து, உடலை சரயன் நதியில் வீசிய கொடுமையை அரங்கேற்றினார்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சீதாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், குற்றவாளிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 38 வயதான நீலு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 364 (கடத்தல்), 376AB (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 13,000 ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, இந்தக் கொடூரம் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய குற்றவாளிகள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்றும் கடுமையாகக் கண்டித்தார். இது அரிதிலும் அரிதான வழக்கு எனவும், இவர்கள் வாழ உரிமையற்றவர்கள் எனவும் தீர்ப்பில் தெரிவித்தார்.
