கர்நாடக மாநில டிஜிபியாக பொறுப்பு வகித்த பிரவீன் சூட் தற்போது சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் தற்போது திமுக அரசுக்கு புதிய நெருக்கடிகள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு திமுகவின் பழைய பைல்களை தூசி தட்டி நெருக்கடி கொடுக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் பிரவீன் சூட் தற்போது திமுக ஆட்சியில் வெடித்த 2ஜி ஊழல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது‌. இதில் போதிய ஆதாரங்கள் இல்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டாலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்னமும் வழக்கு மேல்முறையீட்டில் இருப்பதால் இந்த வழக்கு தற்போது சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டதாக அந்த மாணவி பேசிய வீடியோ ஒன்றும் வெளியானது. இதற்கு நீதி கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குரல் கொடுத்து வருகிறது. இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட நிலையில் இந்த வழக்கும் இனி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2006-11 ஆம் காலகட்டத்தில் கருணாநிதி ஆட்சி காலத்தில் சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் அமைப்பதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கான டெண்டரில் பங்கேற்ற அஸ்டாம் என்ற நிறுவனம் ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக கொடுத்தது என பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த மூன்று விஷயங்களை வைத்த திமுக அரசுக்கு இனி பிரவீன் சூட்டால் நெருக்கடிகள் வரலாம் என்று கூறப்படுகிறது.