ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை தொண்டர்களும், வெகுண்டெழுந்து அந்த சட்ட விதியை….  புரட்சித்தலைவர் மாற்றக்கூடாது என்று இருந்த  சட்ட விதிகள் எப்படி இவர்கள் மாற்றலாம்? என்பதற்கு அனைத்து தொண்டர்களும் இன்றைக்கு கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பொதுமக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

திரு எடப்பாடி பழனிச்சாமி இந்த கழகத்தை ஆரம்பித்தாரா? வளர்த்தாரா? தியாகம் செய்தாரா? எதுவுமே இல்ல! எதுவுமே இல்ல! முதலமைச்சராக திரு. எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து வந்து வாங்கினார் என்பதை நாடு மட்டுமல்ல, இந்திய திருநாடே…. இந்திய திருநாடே…கூர்ந்து கவனித்தது. பதவி கொடுத்த சின்னம்மா அவர்களையே தரக்குறைவான வார்த்தையில் நம்பிக்கை துரோகம்யை . நம்பிக்கை துரோகம். முதல் தர்ம யுத்த காலத்தில் கழகம்  இரண்டாக இருந்து ஒன்றுபட வேண்டும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கழகத்தை இணைத்தோம்.

ஆட்சிக்கு ஒரு சோதனை வருகின்ற பொழுது ஓபிஎஸ் இன் ஆதரவு அவர்களுக்கு தேவையானது. ஓபிஎஸ் ஆதரவு தந்த நாள் தான், அந்த ஆட்சி அன்றைக்கு  5 ஓட்டில் காப்பாற்றப்பட்டது. எதிர்த்து நான் வாக்களித்திருந்தால் ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை.   கட்சியே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டிருக்கும். இவையெல்லாம் கொஞ்சம் கூட நன்றி இல்லை…. துளி கூட நன்றி இல்லாமல், தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை, தான் மட்டுமே எல்லா பதவியும் கையில வச்சிக்கிடனும்,  நான் சொன்னதை மட்டுமே கேட்க வேண்டும்,  எதிர்த்து யாரும் பேசக்கூடாது என விமர்சனம் செய்தார்.