இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இன்று ஒரே நாளில் 6,155 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவால் 11 பேர் இறந்த நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,194 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.