பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கான கல்வி, தொழில் மற்றும் திருமண போன்ற தேவைகளுக்கு இப்போதிலிருந்து பெற்றோர்கள் சேமிப்பதற்கான ஒரு சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 7.6 சதவீதத்திலிருந்து எட்டு சதவீதமாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது.

இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்து வர வேண்டும். 21 வருடங்களில் மெச்சூரிட்டி பணம் உங்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இருந்தாலும் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறோம்.

15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ஆகும். தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு எட்டு சதவீதம் வட்டி வழங்கப்படுவதால் இந்த வட்டி விகிதத்தில் 21 ஆண்டுகள் கழித்து மெச்சூரிட்டியின் போது உங்களுக்கு 11,16,815 ரூபாய் கிடைக்கின்றது. நீங்கள் முதலீடு செய்யும் தொகை 3.60 லட்சம் தான். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் தொகை 11 புள்ளி 14 லட்சம் ஆகும். கிட்டத்தட்ட வட்டி மூலமாகவே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கின்றது. எனவே பெற்றோர்கள் தங்கள் மகளின் எதிர்காலத்திற்கு பணம் சேர்க்க வேண்டும் என்று கருதினால் உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.