தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞானவேல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஞானவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் ஞானவேலுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.