
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய திட்டமிட்டனர். அப்போது தேனியில் வசிக்கும் தேவராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மணிகண்டன், தேவராஜிடம் நிலம் வாங்குவது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கொடைக்கானலில் நிலம் வாங்கலாம் என்று கூறி, அங்கு வரவழைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் கொடைக்கானலுக்கு சென்ற போது, தேவராஜ் தலைமையிலான கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகள் பணத்தை பறிக்க முயற்சித்த போது தம்பதியினர் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்து கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு சடலங்களை ஒரு நாள் முழுவதும் காரில் வைத்து சுற்றித் திரிந்து, பின்னர் தர்மபுரியில் வீசியுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தேவராஜ் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.