இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1890 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 79 சதவீதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு விகிதமும் 29 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில்கொரோனா தடுப்பு ஒத்திகைகளை நடத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போதிருந்தே செய்யப்படுவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.