இந்தியாவில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா (PM SHRI) என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 9,000 பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இவற்றில் தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து விரைவில் கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

ஸ்மார்ட் வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு மற்றும் பிற இணைத்திட்டங்களில் இணைந்து பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும். இன்னும் சில வருடங்களில் ஸ்மார்ட் வகுப்புகளுக்காக தேர்வு செய்யப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை 14,000 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு ஜார்கண்ட், டெல்லி, மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒடிசா ஆகிய 7 மாநிலங்கள் மட்டும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.