காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

தலைமை முன்னிலை: மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதன் வாக்குறுதிகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை கட்சியின் முறையான அறிவிப்பைக் குறிக்கிறது.இந்த தேர்தல் அறிக்கையில், 

பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளான அக்னிபாத்,  ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல திட்டங்களை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்சினைக்குரிய நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் மாற்றம் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்தும் அரசியல் தெளிவு பெற்ற மற்றும் ஏதேனும் கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய நபர்களை கவர்ந்திழுக்கக்கூடிய திட்டங்கள் ஆகும்.

ஆனால் இவை கட்சி சார்பில் இல்லாத சாதாரண வெகுஜன பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் – ன் தேர்தல் அறிக்கையில், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம், கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வெகுஜன  மக்களை சென்றடைய கூடிய நல்ல திட்டங்கள் இருந்த போதிலும்,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களையே காங்கிரஸ் பிரதான திட்டமாக முன்வைத்து நகர்ந்து செல்வது அவர்களது வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா?  என்பது குறித்து இனி வரக்கூடிய காலங்களில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் முறையில் தான் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.