
சிரியாவில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் மோதலில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் மற்றும் குர்தீஸ் படைகள் போன்றவற்றால் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சிரியா அரசு கிளர்ச்சி படைகளால் கைப்பற்றப்பட்டது. நாட்டின் பெரும் பகுதியை கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றியதால் சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பி சென்றார்.
இந்த நிலையில் அலேப்போ நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவ படைகள் ரஷ்யாவின் ஆதரவுடன் வான்வழி தாக்குதலை நடத்தியதில் 70க்கும் அதிகமானோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அலேப்போ நகரில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸைடான் மற்றும் கலாசா கிராமங்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு ராணுவ உதவியுடன் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான படையினர் நேற்று கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அல் காய்தா மற்றும் அல் நஸ்ரா புரட்சி படையின் மீது வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.