திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த விஜயஸ்ரீ கன்னியாகுமரி செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

அதன் பிறகு அவர் கல்லூரிக்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஜய ஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து விஜயஸ்ரீயின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.