
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ஜெகபர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசின் அப்துல்லா(20) தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5- ஆம் தேதி கல்லூரி முடிந்து அப்துல்லா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஏலூர்பட்டி உப்பாத்து பாலம் அருகே சென்றபோது சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அப்துல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அப்துல்லா படிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.