கோவையில் உள்ள ஐடி பார்க்கில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் சுமார் 26 நிறுவனங்கள் அமைய இருக்கிறது. இந்த புதிய கட்டிடங்களை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி கோவை ஐடி பார்க்கில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 26 நிறுவனங்கள் அமைய இருக்கும் நிலையில் 14,000 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு இந்த புதிய கட்டிடத்தில் தீயணைப்பு வசதி, லிப்ட் வசதி, பார்க்கிங் என அனைத்து வசதிகளும் இருக்கும். மேலும் ஏப்ரல் 30-ம் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடையும் என ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளதாக அமைச்சர் கூறினார்.