சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். மாணவர்கள் பயிற்சி பெறும் நேரத்தில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு அங்கு உணவும் வழங்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் வருகிற கல்வி ஆண்டில் என்ஐடி மற்றும் ஐஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி துறையின் மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலாளர் சுதன் தெரிவித்துள்ளார். மேலும் ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை https://jeeadv.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.