தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஏற்பதில் கவனமாக இருக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கண்காணிக்குமாறு உளவுத்துறைக்கு மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக மட்டுமே தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலின் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது குறித்து உளவுத்துறையிடம் பாஜக அரசு ரிப்போர்ட் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினை தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். மேலும் இது தொடர்பான ரிப்போர்ட்டை விரைவில் பாஜக அரசிடம் உளவுத்துறை ஒப்படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.