தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது தேர்தல் வியூக வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி வைக்க கட்சிகள் தயக்கம் காட்டுவதால் தனியாக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக தான் அமையும். இதன் காரணமாக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவின் போது நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் தேசிய தலைவர்களை அழைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களிடம் பாஜகவை எதிர் கொள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம் என்பதே அவர்களுக்கு புரிய வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒருவேளை அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கலாம் என்பதும் அரசியல் வியூக வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.