பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி அதன் நோட் 12 தொடரை வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதுவரையிலும் 3 ஸ்மார்ட் போன்கள் வரிசையில் இருக்கிறது. அவை 5ஜி இணைப்பை ஆதரிக்கிறது. இந்நிலையில் 4ஜி இணைப்பை மட்டும் ஆதரிக்கும் Redmi Note 12 என பெயரிடப்பட்ட மற்றொரு ஸ்மார்ட்போன் வரிசையில் சேர்க்கப்படவுள்ளது. இந்த போன் வரும் மார்ச் 30ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

தொலைபேசி புது பளபளப்பான நிறத்தில் காணப்படுகிறது. ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) ஸ்மார்ட்போன், 120hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத் திறனுடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 685 SoC வாயிலாக இயக்கப்படும். புகைப்படம் எடுக்க இதில் 50MP+8MP+2MP சென்சார்கள் இருக்கும். முன் பக்கத்தில் 13MP செல்பி கேமரா இருக்கக்கூடும். இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.