இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி சாதனை படைத்தார். அஸ்வின் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி கொடுக்க கொடுக்க இருக்கிறார்.

இந்த பயிற்சிக்காக 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி நடைபெற இருக்கிறது. மாநகராட்சி பள்ளிகளில் கிரிக்கெட் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர மாநகராட்சி முடிவு செய்துள்ளதால் அதற்காக பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. மேலும் இதேபோன்று மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உட்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.