
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. சென்னையில் மழை நீர் தேங்காமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். மழை நீர் வடிகால் பணிகள் கை கொடுத்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மூன்று மாதமாகவே செய்து வந்தோம். வெள்ள மீட்பு பணிகளில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.