
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லோரா என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலை விமர்சித்து இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் பணியாற்றி வரும் கல்லூரி நிர்வாகம், பேராசிரியை லோரா இந்திய ராணுவத்தை விமர்சித்த காரணத்தினால் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.