சென்னை விமான நிலையத்தில் நேற்று குடியரசு தின விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை பன்னாட்டு முனையத்தின் அருகே விமான நிலைய இயக்குனரான சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.ஸ்ரீராம், விமான நிலைய அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மத்திய தொழிற்படை போலீசாரின் அணி வகுப்பு மரியாதையும்  நடைபெற்றது. இந்நிகழ்வில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் பேசியதாவது,  சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் 2½ லட்சம் சதுர அடியில், ரூ.2,150 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில்  திறக்கும் நிலையில் உள்ளது.

மேலும் இந்தியாவிலேயே பயணிகளின் வசதிக்கு ஏற்ப, மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், பஸ் என அனைத்து போக்குவரத்து வசதிகள் கொண்டதாக சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.