சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேர்ந்து இருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோ இணையதளத்தில் வைரலானது. இது சீமான், பிரபாகரனை சந்தித்தபோது எடுத்த போட்டோ என்று பலரும் கூறினர். இந்நிலையில் அந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதோடு அவரது போட்டோவை சீமான் பயணப்படுத்த கூடாது. அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவரது போட்டோவை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.