செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகாவில் உடனே எல்லாரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த உணர்வு ஏன் நமது தமிழக அரசுக்கு இல்லை ? அப்படிங்கிற கேள்வியை நிருபர்கள் ஆகிய நீங்கள் எழுப்பியது மூலம், நானும் கேட்கின்றேன். அந்த ஒற்றுமையை நாமளும் நிரூபித்தால் தான்,  நமக்கான உரிமையை பெற்றுத்தர முடியும்.

துரைமுருகன் அவர்கள் டெல்லிக்கு போறாரு, வராரு. ஒரு பேட்டியை கொடுக்கிறார். அதோட அவரு வேலை முடிஞ்சுச்சு. உச்சநீதிமன்றத்தை தான் நாடனும்னு சொல்றாரு. உச்சநீதிமன்றம் என்ன சொல்லுது ? இதில் நாங்க தலையிட முடியாதுன்னு, அவங்க தள்ளுபடி பண்றாங்க. இப்படியே போயிட்டு இருந்தா ? விவசாயிகளுடைய வாழ்க்கை என்ன ? அதனால நிச்சயமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டணும்.

எப்படி கேப்டன் ? ஒருவாட்டி அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்தாரோ,  அதேபோல அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும்  அழைத்துச் சென்று,  தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை கட்டாயம் பெற்று தர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என தெரிவித்தார்.