
தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் அதன் பின் தேதி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு பொது விடுமுறை தினத்தை செப்டம்பர் 17 ஆக மாற்றி அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் பள்ளிகளுக்கான விடுமுறை தேதி செப்டம்பர் 16ல் இருந்து 17ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் செப்டம்பர் 17ஆம் தேதி தான் அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் வருகிற 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.