
சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், தேனி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.