சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2025 இல் மீண்டும் கோப்பையுடன் போட்டியை முடித்து வைத்தனர்.இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்த்த மகிழ்ந்த நிலையில் சிலர் சில காரணங்களால் பார்க்க முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில் ஒரு பெண் ஊழியரும், அவரது மேலாளரும் சாம்பியன் டிராபி போட்டி தொடர்பாக உரையாடியது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடலில் கூறப்பட்டிருப்பதாவது, இதில் நிறுவனத்தின் மேலாளர் “இந்தியா வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்களா?” என கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் ஊழியர் “ஆம், அப்படிதான் நினைக்கிறேன்” என பதில் அளிக்கிறார். பின்னர் மேலாளர், சரி, விடுமுறை எடுங்கள். பாப்கான் மற்றும் பீட்சா வாங்கிய தொகையை எனக்கு அனுப்புங்கள் அதன் அதிகபட்ச வரம்பு ரூபாய் 1000 இருக்க வேண்டும்”.என இருந்தது.

இந்த உரையாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து “எனது மேலாளர் தான் சிறந்தவர்” என்ற தலைப்பில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு கிட்டத்தட்ட 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது. இந்த பதிவிற்கு “கனவு மேலாளர், எனக்கும் ஒரு வேலை வாங்கி தர முடியுமா?” என நகைச்சுவையாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.