திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெரினா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு கைப்பையில் எடுத்துக்கொண்டு திசையன்விளை செல்லும் பேருந்தில் எறியுள்ளார்.
இதனையடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்கியதும் கைப்பையில் இருந்த பணம், நகை திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியுள்ளனர். இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.