கோலிவுட் CGI-ல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பெரும் எதிர்பார்ப்பில் அக்டோபர் 19-ல் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே   பெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் படத்தின் முதல் 10 நிமிடங்களை மட்டும் தயவுசெய்து தவற விட்டு விடாதீர்கள். அதற்காக ஆயிரக்கணக்கானோர் கடினமாக உழைத்துள்ளோம் .  போன அக்டோபர் மாதம் முதல் இந்த அக்டோபர் மாதம் வரை அதற்காக மட்டுமே பல மணி நேரங்கள் செலவிட்டு கடினமாக உழைத்து உள்ளோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம  ட்ரீட் ஆக அந்த காட்சிகள் அமையும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் குறிப்பிட்ட முதல் பத்து நிமிட காட்சிக்காக பட குழுவினர் ரூ 10ல் இருந்து 15 கோடி செலவிட்டுள்ளனர். செலவிடப்பட்ட அந்த தொகைக்கு ஏற்ப  கச்சிதமான CGI  பணிகள் மிகவும் தத்ரூபமாக நிஜ கழுதைப்புலி  படத்தில் நடிக்க வைக்கப்பட்டது போல் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் படத்தின்  பல இடங்களில் CGI குழு தங்களது பணியை  மேம்பட செய்துள்ளது.  லியோ திரைப்படத்தின் ஆகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாக முதல் 10 நிமிட காட்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. CGI  காட்சிகளில் கோலிவுட் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.