நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும்  திரையரங்குகளில் வெளியாகியது. இதனை ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும் இப்படத்தின் வசூல் கொஞ்சம் கூட குறையவில்லை. முதல் நாளில் இப்படம் 148 கோடி வசூலித்துள்ளது.

லியோ படத்தில் நடித்திருந்த சாண்டியின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றுள்ளது. சாண்டி மாஸ்டர் வரும் காட்சிகள் பயத்தை ஏற்படுத்து வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் சாண்டி மாஸ்டர் நடிகராக கலக்குவார் என தெரிகிறது.