பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவின் போது படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு அந்த கால ராஜ சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்த சிம்மாசனத்தில் பிரபலங்கள் பலரும் அமர்ந்து விதவிதமாக போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, ரேவதி, சோபனா, சுகாசினி, குஷ்பூ, மணிரத்தினம் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.