
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் செயலியை பயன்படுத்துகிறார்கள். முதல்முறையாக பேடிஎம் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு பேடிஎம் நிறுவனம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. அதாவது paytm செயலியில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட UPI LITE வசதியை முதன் முதலாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 வழங்கப்படுகிறது. இந்த யுபிஐ லைட் வசதியின் மூலம் சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளுக்கு பின் நம்பர் என்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த யுபிஐ லைட் மூலம் எப்படி 100 ரூபாயை பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் paytm செயலிக்குள் சென்று இடது பக்கத்தில் உள்ள ப்ரொபைல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து other settings என்பதற்கு கீழ் உள்ள UPI lite என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதை பயன்படுத்த நீங்கள் விரும்பும் பேங்க் அக்கவுண்ட் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு யுபிஐ லைட் ஆக்டிவேட் செய்து பணத்தை Add செய்யும் படியான பக்கம் காண்பிக்கும். அதில் நீங்கள் விரும்பும் பேமண்டை இணைக்க வேண்டும். மேலும் நீங்கள் டைப் செய்து Mpin உறுதி செய்ததும் யுபிஐ லைட் ஆக்டிவேட் ஆகிவிடும்.