டெல்லியை சேர்ந்த ஒருவரின் கார் திருடப்பட்டது. அந்த காரை திருடிய நபர் ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் விட்டு சென்றுள்ளார். கார் எண் பலகை இல்லாமல், ஒரு குறிப்புடன் கண்டு பிடிக்கப்பட்டது. திருடர்கள் தங்களது கையால் எழுதப்பட்ட குறிப்புகளை கார் மீது ஒட்டியிருந்தனர். முதலாவது, “இந்த கார் டெல்லியில் இருந்து திருடப்பட்டது, மன்னிக்கவும்” என குறிப்பிட்டிருந்தது.

இன்னொரு குறிப்பில் “நான் இந்தியாவை நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளனர். மூன்றாவது குறிப்பில், காவல்துறையிடம் அவசரமாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். போலீசார் இந்த காரை, ஏதாவது குற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கார் டெல்லியின் பாலம் பகுதியிலிருந்து திருடப்பட்டதாகவும், அந்த பகுதியில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நட்டி வருகின்றனர்.