திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் பயிற்சியாளர் உட்பட 5 பெண்கள் ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென வேகமாக சென்று திரும்பியதால் பின் இருந்து வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் கார் ஓட்டுநர், பயிற்சியில் ஈடுபட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் வாணியம்பாடி நீலி கொல்லி பகுதியை சேர்ந்த நபியா ஷபாகத் (38) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.