பெங்களூருவில் அண்மையில் நடந்த ஒரு மிருகீயமான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 25 அன்று இரவு, 24 வயதான டார்சன் என்ற உணவு விநியோகம் செய்யும் தொழிலாளி தனது ஸ்கூட்டரில் நண்பருடன் சென்றபோது, மனோஜ் குமார் என்பவர் ஓட்டிவந்த காரின் பக்கக்கண்ணாடி மீது லேசான உரசல் ஏற்பட்டுள்ளது. டார்சன் உடனடியாக மன்னிப்பு கேட்டும், காரில் இருந்த மனோஜ் குமார் (32) மற்றும் அவரது மனைவி ஆரதி ஷர்மா (30) ஆகிய இருவரும் அடங்காத கோபத்தில் யூ-டர்ன் எடுத்து,
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று, டார்சனின் ஸ்கூட்டரின் பின்னால் மோதி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் டார்சன் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது நண்பர் வருண் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் முதலில் விபத்து எனப் பதிவு செய்யப்பட்டாலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் இது திட்டமிட்ட கொலை என்று உறுதிப்படுத்தப்பட்டு, இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
When will people learn that humanity matters more than ego?
A mirror can be replaced. A life cannot.
Is a Poor Man’s Life Worth Nothing?In yet another shocking display of arrogance and inhumanity, a delivery agent lost his life in a horrifying road rage incident in Bengaluru. A… pic.twitter.com/1tns42xRvp
— Karnataka Portfolio (@karnatakaportf) October 29, 2025
