ஐபிஎல் 19-வது சீசன் பாதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு போட்டியில் கூட தோற்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ். 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இந்த இமாலய வெற்றிக்குக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரின் சிறப்பான தலைமை தான் காரணம் எனப் பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில், தற்போது அவர் சிக்கிய ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிப் போதையில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரின் நிஜ முகம் இதுதான் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதில், அவரிடம் செல்பி கேட்ட ரசிகர் ஒருவரைப் பார்த்து, “முதலில் என் பதிலுக்குப் பதிலாக நீ போய் மீடியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்” என்று கோபமாகத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். ஒரு செல்பி கேட்டதற்கு இவ்வளவு திமிராகப் பதிலளிக்க வேண்டுமா என நெட்டிசன்கள் ஐயரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

“திறமை இருக்கலாம், ஆனால் ரசிகர்களை மதிக்கத் தெரியாதது அழகு கிடையாது” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.