
தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் 3 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்கம் அமைக்க டெல்டா பகுதிகளில் எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதல்வர் ஸ்டாலின் கூறியதை அடுத்து தற்போது மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டோம் என்பதில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருந்ததன் காரணமாக தற்போது அந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இது டெல்டா காரராக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் @mkstalinஅவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம்காப்போம் https://t.co/NwGZ3OK5sG
— Udhay (@Udhaystalin) April 8, 2023