திமுக  தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மாண்புமிகு மோடி அவர்கள்… முதலமைச்சராக  இருந்த வரைக்கும் பேசுனதுக்கும்,  பிரதமரானதும் செய்யறதுக்கும் இருக்கிற வேறுபாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டும் உங்ககிட்ட சொல்ல விரும்புறேன். டெல்லிய மையப்படுத்தாம மாநிலங்களுக்கு ஏத்த அணுகுமுறையோட திட்டங்கள் தீட்ட படனும்னு பிரதமர் சொன்னார். ஆனால், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்க கூடிய திட்டக் குழுவை கலைச்சிட்டு…  சத்தே இல்லாத நிதி ஆயுக் அமைப்பை உருவாக்குனார்.

மாற்றுக் கட்சி ஆட்சிகளை பழிவாங்க மாட்டேன்னு சொன்னாரு,  ஆனால்  பா.ஜ.க. என்ன பண்ணுது ? எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியலையோ, அங்க இருக்கின்ற கட்சிகளை இரண்டா, மூணா,  உடைச்சி  எம்.எல்.ஏ.க்கள விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துறாங்க.

முக்கியமா இன்னொன்னயும் பிரதமர் சொன்னார். கூட்டாட்சி கருத்தியலை  ஆதரிக்கிறவன் நான். டெல்லிக்கு காவடி தூக்குற நிலைமைய மாத்துவேன்னு சொன்னாரு. ஆனால்… இப்ப என்ன நடக்குதுன்னா….  மாநில அரசோட திட்டங்கள நிறைவேத்தக்கூட ஒன்றிய அரசோட வாசல்ல காத்திருக்க வேண்டிய நிலைய உருவாக்கி இருக்காங்க.மறைமுக வரி விதிப்பில சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய்வோம்னு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில சொன்னாங்க.

கூடுதலா…  பிரதமர் மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்கள் வழங்குவோம்னு சொன்னாரு. ஆனால்  ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குகிற காலத்தை கூட நீட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. மாநிலங்களோட பங்கையும் ஒழுங்கா கொடுக்குறது இல்ல. சுருக்கமா சொல்லணும்னா…  மாநிலங்களோட நிதி நிலைமை ஜி.எஸ்.டி. ஆல்  இப்போ ஐ.சி.யு.ல இருக்கு என தெரிவித்தார்.