கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நூற்றிற்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. இதில் போக்குவரத்து கழகம் சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் பயணிகள் தங்கள் கையில் வைத்துள்ள கைக்குட்டை, பை உள்ளிட்ட பொருட்களை இருக்கையில் போட்டு சீட்டு பிடிப்பார்கள்.

ஆனால் பொள்ளாச்சி அரசு பேருந்து இருக்கையில் அமர சீட் பிடிப்பதற்காக 2 அரிவாள்களை சீட்டில் போட்டு இடம் பிடிக்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் பேருந்து நிலையத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.