
நாடாளுமன்றத்தில் பருவ கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கப்படும் நிலையில் அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற நிலையில் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது ஆகும். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிலையில் தற்போது பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வருகின்ற 23ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அதற்கு அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் தூர்தர்ஷன், சன்சத் டிவி மற்றும் அவற்றின் அதிகாரப்பூர்வ youtube தளங்களில் நேரடியாக பார்க்கலாம். அதோடு இந்த முறை மத்திய அரசு டிஜிட்டல் முறையிலேயே முழுமையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiabudjet.gov.in என்ற ஆன்லைன் முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.