இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் மலிவு கட்டண திட்டங்களையும் வழங்குகிறது.அதே சமயம் ஒருபுறம் 4ஜி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே மறுபுறம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

அதன்படி பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.2,399 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.200 இந்த திட்டத்திற்கு செலவாகும். திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 395 நாட்கள் ஆகும் . இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மேலும்  தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games ஆகிய வசதிகள் உள்ளன.