
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சன்னிகுமார் (18) என்பவர் வசித்து வருகிறார். இவர் 12 ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் சமோசா கடை நடத்தி வருகிறார். இவருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நீட் தேர்வு எழுதினார். அதில் 664 மதிப்பெண் எடுத்தார். சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை பார்த்துக்கொண்டே அவர் இந்த மதிப்பெண்ணே எடுத்தார். அவர் நீட் தேர்வின் குறிப்புகளை பேப்பர்களில் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்து படித்து வந்ததோடு, இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.
மருந்துகளை பார்த்ததால் நான் டாக்டர் படிக்க ஆசைப்பட்டேன். மக்கள்களை நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக டாக்டராக ஆசைப்பட்டேன். சமோசா தொழில் என்னுடைய வருங்காலத்தை பாதிக்காது, தொடர்ந்து சமோசா விற்றுக்கொண்டே டாக்டருக்கும் படிப்பேன். இவரது வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவக் கல்லூரி சேர்ந்து படிக்க ரூ.6 லட்சத்தை நிதியாக வழங்கியுள்ளார்.