தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுறையும் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டசபையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம் பி ஆ.ராசா கூறியதாவது, சிறுபான்மையினருக்கு எதிராக, அரசியலமைப்புக்கு விரோதமாக வக்ஃப் சட்ட திருத்த மசோதா உள்ளது. ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வரலாற்று அடைப்படையிலான சொத்துக்களின் உரிமைகளுக்கு இந்த சட்ட திருத்தம் அச்சுறுத்தலாக உள்ளது.

இஸ்லாமியர் அல்லாத ஒருவரை வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மை தன்மை பற்றி பாஜக எப்போதும் கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு மதம் மட்டுமே முக்கியம். நேர்மையாக சொத்துக்களை நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக வக்ஃப் சட்ட திருத்த மசோதா இருப்பதாக அவர் தெரிவித்தார்.