
யுபிஎஸ்சி 2022-ம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் இறுதி தேர்வு முடிவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். அதன் பிறகு கரிமா லோகியா என்பவர் இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன் தேசிய அளவில் 147-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த மதிவதனி ராவணன் 447-வது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்