
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப்-1, குரூப் 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 70 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும்.

இந்நிலையில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்வுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.