சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை நடத்த முடியாது என்று கூறி ஐஸ்ஹவுஸ் மூர்த்தி மிரட்டியுள்ளார்.

அதோடு இருவரைக் கடைக்கு அனுப்பி பிரச்சனை செய்ய வைத்துள்ளதாக கடையின் உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவரை கைது செய்தனர்.