கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் செங்குன்றத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய பட்ஜெட் ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட் ஆகும். தமிழ்நாட்டுக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.