கையில் பொட்டலங்களுடன் சந்தேகப்படும்படி இருந்த துஷார் கோயில், ஹிமான்சு, அவுரங்க சீப் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மூட்டை மூட்டையாக வைத்திருந்த போதைப்பொருட்கள் இருக்கும் குடோன்கள் கண்டறியப்பட்டது.
அதன் பின் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த போதைப்பொருட்கள் மூட்டைகளை கைப்பற்றினர். இதுவரை டெல்லியில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் இதுவாகும்.