தமிழ்நாட்டு ஆளுநர் ரவி மூன்று ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதுகுறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ஐ செல்லாமல் ஆக்கி விடுவது போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.