நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து புவனேஸ்வரிக்கு மேயராகும்  வாய்ப்பை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த 2021 இல் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று அண்ணாமலை முன்னிலையில் திமுகவிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.